விஜய்-50: இயக்குநர் ராஜகுமார்?

அழகர் மலை படத்தின் இயக்குநர்தான் ராஜகுமார். அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சங்கிலி முருகன் தயாரிக்க, விஜய், தமன்னா ஜோடி போட, வைகைப் புயல் வடிவேலு செமத்தியான காமெடி பண்ணப் போகும் விஜய்யின் 50வது படத்தை ராஜகுமார் இயக்கப் போகிறாராம்.
அழகர் மலையும், சங்கிலி முருகனின் தயாரிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போவது இளையராஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்க வருகிறார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வேட்டைக்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தை முடித்து விட்டு தனது 50வது படத்திற்கு வருகிறார் விஜய்.
சங்கிலி முருகனின் கல்யாணி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கக் கூடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ராஜகுமாருக்கு அந்த வாய்ப்பு போயுள்ளதாம்.
அழகர் மலை படத்தின் இயக்கம் பிரமாதமாக வந்திருப்பதாக அறிந்த பின்னரே ராஜகுமாரை தேர்வு செய்தாராம் விஜய்.
படத்தின் தலைப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக் குரல் இறுதிக் கட்ட பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











