கந்தசாமி... ரஜினி பாராட்டு!

அவருக்காக சிறப்புக் காட்சி ஒன்றை சென்னை ப்ரிவியூ திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார் கலைப்புலி தாணு.
படத்தை ரசித்துப் பார்த்த ரஜினி, காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளதாகவும், நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருப்பதாகவும் பாராட்டினார். படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில பாராட்டினாராம் ரஜினி.
ரஜினி இந்தப் படம் பார்த்த நிகழ்வை பெரிய அளவில் விளம்பரமாகப் பயன்படுத்த தயாரிப்பாளர் தாணு முடிவுசெய்துள்ளார்.
ரஜினி படம் பாரத்த செய்தியை மீடியாவுக்கு தெரிவிக்க தாணு முடிவு செய்த போது, 'இப்போதுதான் கந்தசாமி பற்றிய டாக் நன்றாக உள்ளதே… இன்னும் ஓரிரு நாள் கழித்து இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல செய்தியைத் தாங்கி வந்துள்ள ஒருபடம் இன்னும் அதிக மக்களைச் சென்றடைய நானும் உதவியதாக இருக்கும்", என்றாராம் ரஜினி. இந்தப் படம் குறித்த தனது கருத்துக்களை வீடியோ பேட்டியாகவும் வழங்கியுள்ளாராம் ரஜினி.
"ரஜினியின் இந்தப் பெருந்தன்மையை, நட்பை வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன்...", என்றார் கலைப்புலி தாணு.


Click it and Unblock the Notifications











