எந்திரன் பப்ளிசிட்டி... அடக்கி வாசிப்பது ஏன்?

பாபா, சிவாஜிக்கு தனி பக்கம் ஒதுக்கிய பத்திரிகைகள்கூட எந்திரன் விஷயத்தில் மட்டும் அடக்கியே வாசிக்கின்றன.
படத்தின் தயாரிப்பு கை மாறியதால்தான் ஒரு வித எச்சரிக்கை உணர்வோடே செய்திகளைத் தருகின்றன மீடியாக்கள் என்கிறார்கள் கோடம்பாக்கப் புள்ளிகள். படத்தைப் பற்றி நாம் ஏதாவது எழுதப்போய் அது அவர்களுக்கு உறுத்தலாக இருந்துவிட்டால் வீணாக எதற்குப் பிரச்சினை என்ற சின்ன உதறல் ஒரு பக்கம்.
இன்னொன்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமாகத் திகழ்கிறார்கள். அவர்களை மீறி எந்திரன் குறித்து 'எக்ஸ்க்ளூசிவ் செய்திகள்' என வெளியிடுவது 'திருப்பதிக்கே லட்டு' கதையாகி விடாதா என்று சினிமா பத்திரிகையாளர்களுக்குள்ளேயே கிசுகிசுக்கப்படுகிற சமாச்சாரம்.
படம் குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை அமைதி காக்கலாமே என தன்னிடம் பேட்டி கேட்டு பெரும் முயற்சி மேற்கொள்ளும் பத்திரிகைகள் மற்றும் சானல்களை ரஜினியே அமைதி காக்க வைத்துள்ளதாக, தெரிவித்தார் படத்தில் பங்கு பெற்றுள்ள ஒரு டெக்னீஷியன்.


Click it and Unblock the Notifications











