'மேடி' லீலை நிறுத்தம்; ஆஸ்கர் 'லீலை' துவக்கம்!

By Staff

Madhavan with Sadha
ராம் கோபால் வர்மா தயாரிப்பில் மாதவன்-சதா-ஷமிதா ஷெட்டி நடிப்பதாக இருந்த 'லீலை' படம் திடீரென கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் கோபால் வர்மா இந்தியில் தயாரித்து இயக்கிய டார்லிங் படம்தான் மாதவன்-சதா நடிக்க லீலையாக உருவாகி வந்தது. கொனா வெங்கட் இயக்கிய இந்தப் படம் துவங்கப்பட்ட போதே பல பைனான்ஸ் சிக்கல்கள் எழுந்தன.

நண்பர்கள் சிலரது உதவி கிடைத்ததால் தன்னை ஒரு இணைத் தயாரிப்பாளராக்கிக் கொண்டு இப்படத்தைத் துவக்கினார் ராம் கோபால் வர்மா.

ஆனால் திடீரென்று அந்த நண்பர்கள் தயாரிப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கவே, வேறு வழியின்றி படத்தையே டிராப் செய்து விட்டார் ராமு.

இந்திப் படங்களில் கவனம் செலுத்தவே போதிய நேரம் இல்லாத்தால், இந்தத் தமிழ்ப் படத்தை கவனிக்க முடியவில்லை என்று இதற்குக் காரணமும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்கர் ரவிச்சந்திரன் 'லீலை' எனும் பெயரில் புதுப்படம் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மாதவனின் லீலை டிராப் ஆகி விட்டதால், அந்த்த் தலைப்பை ஆஸ்கர் பயன்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதால், ஜோராக படப்பிடிப்புக்குப் போய்விட்டனர் ஆஸ்கர் குழுவினர்.

இன்னொரு பக்கம் மன்மத லீலை, கிருஷ்ண லீலை என இரண்டு படங்கள் வேறு தயாராகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X