முரட்டுக்காளை விஜய்க்கு இல்லை!

ஆனால் சைலண்டாக அந்த வேலையைச் செய்து முடித்து விட்டார் இயக்குநராக இருந்து இப்பேது மினிமம் கியாரண்டி நாயகனாக மாறிவிட்ட சுந்தர் சி.
1980-ல் ரஜினிகாந்த்- ரதி- ஜெய்சங்கர் நடிப்பில் ஏவிம் தயாரிப்பில் வெளியான முரட்டுக் காளை அதிரடி வசூலைத் தந்தது. தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க வசூல் படங்களில் இன்றும்கூட முன்னிலை வகிக்கும் படம் இது.
இந்த படத்தின் டைட்டில் மட்டுமல்ல, படத்தை அப்படியே உல்டா செய்வதுதான் சுந்தரின் திட்டம். ஒரிஜினல் முரட்டுக் காளையில் இளையராஜா இசையில் இடம்பெற்ற 'பொதுவாக எம்மனசு தங்கம்...' சூப்பர் ஹிட் பாடலை அப்படியே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி பெற்றுவிட்டாராம் சுந்தர்.
ரஜினி நடித்த காளையன் பாத்திரத்தில் சுந்தர் நடிக்கிறார். சுருளிராஜன் வேடத்துக்கு விவேக்கை தேர்வு செய்துள்ளார்.
படத்தைத் தயாரிப்பவர் பிரபல இயக்குநரும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகியுமான அமிர்தத்தின் மகன் குணாநிதி.
கதாநாயகி, இயக்குநர் என முக்கிய கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.


Click it and Unblock the Notifications











