'அயன்' பண்ணும் ஏவி.எம்., சூர்யா!

By Staff

Surya with Tamanna
பேரழகன் படத்திற்குப் பிறகு ஏவி.எம். நிறுவனமும், சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள். அயன் என படத்திற்குப் பெயரிட்டுள்ளனர்.

பேரழகன் படத்தில் சூர்யா வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தும் படம் வசூல் ரீதியாக சாதிக்கவில்லை. இதனால் ஏவி.எம்.முக்கும், சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். இனிமேல் ஏவி.எம். படங்களில் நடிப்பதில்லை என்று சபதமே போட்டார் சூர்யா.

ஆனால், நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்ற எழுதப்படாத விதியின்படி, மீண்டும் இரு தரப்பும் இணைகிறது - அயன் படத்தின் மூலம்.

அயன் என்ற பெயருக்கு, எல்லாம் ஒருவனே என்று பொருள் என கவிஞர் வைரமுத்து அர்த்தம் கொடுத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. படத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம்.முடன் மீண்டும் இணைவது எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்களில் நான் தோன்றப் போகிறேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய படமாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக ஏவி.எம். பேனரில் இசையமைக்க வருகிறார். எம்.எஸ்.பிரபு கேமராவைக் கையாளுகிறார்.

ஏவி.எம். சரவணனின் புதல்வரான எம்.எஸ்.குஹனின் மகன் அருண் குஹன், அபர்ணா குஹன் ஆகியோர் தயாரிப்பாளர்கள் வரிசையில் இப்படத்தில் இணைகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X