ஆகஸ்ட் 31ல் உன்னைப்போல் ஒருவன் ஆடியோ!
கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி மிக வித்தியாசமான முறையில் நடக்கிறது.
வழக்கம்போல பாடல்களை வெளியிட்டு விட்டு, மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்காமல், வேறு விதமாக இந்த விழாவை நடத்த கமல் திட்டமிட்டிருப்பதாக அவரது மீடியா மேனேஜர் நிகில் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதிலுமிருந்து செய்தியாளர்கள் வருவதால், விழா எவ்வித பதட்டமோ நெரிசலோ இல்லாமல் நடக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கமல் ஹாசனுடன் முதல் முறையாக மோகன்லால் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் வழக்கமான முறையில் பாடல்கள் இடம்பெறாது. ஆனால் டைட்டில் மற்றும் சில காட்சிகளின் பின்னணியில் பாடல்கள் ஒலிக்குமாம். எனவே இதை ஒரு இசை ஆல்பமாக வெளியிடுகிறார்கள். மனுஷ்யபுத்திரன் முதல்முறையாக இப்படத்தில் பாடல் எழுதியுள்ளார்.
முழுக்க முழுக்க ரெட் ஒன் காமிராவில் படமாக்கியுள்ளனர்.
கமல்ஹாசன்- சந்திரஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











