திட்டமிட்டபடி வேட்டைக்காரன்!- ஏவிஎம் பாலசுப்பிரமணியம்

பாபு சிவன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பாக உருவாகிவரும் வேட்டைக்காரன் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
இதனால் படம் வெளியாவது தாமதமாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியம் இதை மறுத்துள்ளார்.
"வேட்டைக்காரன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அரங்கு உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. அதில் பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோம். திட்டமிட்டபடி தீபாவளிக்கு இந்தப் படத்தை வெளியிட்டுவிடுவோம்", என்றார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். விஜய்க்கு இது போலீஸ் அதிகாரி வேடமாம்.
இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக புனே செல்கிறார்களாம் படக்குழுவினர்.
More from Filmibeat
avm balasubramaniyam ஏவிஎம் பாலசுப்பிரமணியம் சினிமா தமிழ் விஜய் வேட்டைக்காரன் cinema vettaikkaran vijay


Click it and Unblock the Notifications











