ரஜினியை முந்திய விஜய்!

லயோலா கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகராக மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருக்கிறார். அவருக்கு 21.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே தங்களைக் கவர்ந்த படம் நாடோடி மன்னன் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2வது இடத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருக்கிறார். அவருக்கு 18.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவாஜி படங்களிலேயே சூப்பர் படம் என அவர்கள் பாராட்டியுள்ளது பாசமலர்.
நடிகர் விஜய் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 16.4 சதவீதம் ஆகும். அவரது படங்களிலேயே கில்லிதான் மக்களுக்கு அதிகம் பிடித்துள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முதல் முறையாக முந்தியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தில் இருக்கும் ரஜினிக்கு 16.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் படங்களிலேயே பாட்ஷாதான் மக்களுக்குப் பிடித்துள்ளதாம்.
5வது இடத்தைப் பிடித்திருப்பவர் விஜயகாந்த். கேப்டனுக்கு கிடைத்துள்ள ஆதரவு 10.7 சதவீதம் ஆகும். கேப்டன் பிரபாகரன்தான் விஜயகாந்த் படங்களிலேயே சிறப்பானது என்பது மக்களின் தீர்ப்பு.
ஜெ.வை முந்திய சரோஜாதேவி:
நடிகைகளில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 20.5 சதவீதம் பேர் சரோஜதேவியை பிடித்த நடிகையாக தெரிவித்துள்ளனர்.
சரோஜாதேவி நடித்த படகோட்டி படம்தான் பிடித்த படம் எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இவருக்கு 17.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இவர் நடித்த படங்களிலேயே அடிமைப்பெண்தான் பிடித்த படமாக தேர்வாகியுள்ளது.
3வது இடத்தில் கே.ஆர். விஜயா (13.6- திரிசூலம்), 4வது இடத்தில் ஜோதிகா (11.3- மொழி), 5வது இடத்தில் குஷ்பு (10.4- சின்னத்தம்பி) ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











