விக்ரம் தொடங்கிய சினிமா நிறுவனம்!

By Staff

Vikram
விக்ரம் தயாரிக்கும் படத்தை சசிகுமார் இயக்குகிறார் என்ற செய்தியை சில வாரங்களுக்கு முன்பே முதல் முதலில் வெளிக் கொணர்ந்தது தட்ஸ் தமிழ் என்பது நினைவிருக்கலாம்.

இதோ அதன் பாலோ அப்:

தனது பட நிறுவனத்துக்கு விக்ரம் 'ரீல் லைப்' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படம் குறித்து விக்ரம் இப்படிக் கூறுகிறார்...

சசிகுமாருக்கும் எனக்கும் பல ஆண்டுகால நட்பு. சேதுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோதே அவரை எனக்கு நல்ல பழக்கம். அவரது முதல் படத்தை நான்தான் நியாயமாகத் தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அப்போது பிடிவாதமாக தானே தயாரிப்பதாகவும், இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாம் இணையலாம் என்றும் அவர் கூறிவி்ட்டார். ஆனால், சுப்பிரமணியபுரம் பட ட்ரெய்லர் பாத்ததுமே சொல்லிட்டேன், இது ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும்னு.

அன்றைக்கே, ஒரு தயாரிப்பாளராக எனது முதல் படத்தின் இயக்குநர் சசிகுமார்தான் என முடிவு செய்து அவரிடம் சொல்லிவிட்டேன்.

எனக்கு அளித்த வாக்கின்படி, தனது இரண்டாவது படத்தை எனக்காக இயக்கித் தருகிறார் சசி, என்றார்.

ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்தப் படத்தில் விக்ரமும் நடிக்கவில்லை, சசிகுமாரும் நடிக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X