விஷாலின் 'டபுள் தமாகா'

By Staff

Nayanatara with Vishal
விஷால் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறார்.

சத்யம் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்தார் விஷால். கஷ்டப்பட்டு ஏற்றிய கட்டுமஸ்து உடம்பு, நயனதாராவின் மித மிஞ்சிய கவர்ச்சி, வித்தியாசமான போலீஸ் ஸ்டோரி என பல சாதக அம்சங்கள் அடங்கியும் கூட விஷாலுக்கு சத்யம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தை அதிரடியாகவும், சூப்பர் ஹிட் ஆகவும் கொடுக்க வேகமாக உள்ளார் விஷால். இதற்காக அவர் போடப் போவது இரட்டை வேடம்.

தனது அடுத்த படத்தில் இரட்டை வேடம் பூணவுள்ளாராம் விஷால். ஒரு கேரக்டரை அதிரடியாகவும், இன்னொரு வேடத்தை காமெடி கலந்ததாகவும் திட்டமிட்டுள்ளாராம்.

இப்படத்தையும் அவரது அண்ணனே தயாரிப்பார் எனத் தெரிகிறது. படத்தின் ஹீரோயின், இயக்குநர் முதல் கொண்டு அனைவரையும் வெகு கவனமாக செலக்ட் செய்யத் திட்டமிட்டுள்ளனராம் விஷால் குடும்பத்தினர்.

தனது படங்களின் முந்தைய வெற்றிக்கு இயல்பான கதையும், பில்டப் இல்லாத சூழலுமே காரணம் என்பதை உணர்ந்துள்ள விஷால், அதே பார்முலாவில் இப்படத்தைக் கொடுக்க யோசித்துள்ளாராம்.

சத்தியமாக இந்தப் படம் விஷாலைக் கைவிடாது என நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X