விவேக் மீண்டும் நாயகனாகும் இவன்தான் பாலா!

காமெடியில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்த பிறகு, விவேக்கை ஹீரோவாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட படங்கள் நான்கு. நான்குமே பல பிரச்சினைகளில் சிக்கி, இனி வெளியாவதே சந்தேகம் என்ற நிலை.
விவேக் ஹீரோவாக நடித்த சொல்லியடிப்பேன், மகனே மருமகனே... போன்ற படங்கள் முழுமையாகத் தயாராகிவிட்டாலும், இவை வெளிவருமா என்று தெரியாத நிலை,
இருந்தாலும் ஆசை யாரை விட்டது...
மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம் விவேக். இந்தப் படத்துக்கு இவன்தான் பாலா என பெயர் சூட்டியுள்ளனர்.
பிரபுதேவா நடித்த ராசையா படத்தை இயக்கிய ஆர் கண்ணன் இந்தப்படத்தை இயக்குகிறார். விவேக்குக்கு ஜோடியாக பிரபல ஹீரோயின் ஒருவர் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் துவங்கும்போதே, தான் ஹீரோவாக நடிக்கத் துவங்கி நின்று போன சொல்லியடிப்பேன் படத்தை ரிலீஸ் பண்ணும் முயற்சியில் உள்ளாராம் விவேக்.
Comments


Click it and Unblock the Notifications