சங்கீதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விஜய்யின் தாய், தந்தை?.. என்ன முடிவெடுப்பார்.. பிரபலம் ஓபன்

சென்னை: நடிகர் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் ஏற்பட்ட பிரச்னை பெரிய பூதாகரமாகி விவாகரத்தில் வந்து நிற்கிறது. அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்ததோடு மட்டுமின்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பகீர் கிளப்பினார் சங்கீதா. அதை பார்த்து விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எம்.பி.திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா ஓபனாக சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

விஜய்யின் மனைவி சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அதனை நான் தட்டிக்கேட்டேன். எனவே அவர் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். அதேபோல் எனக்கான நிதி ஆதாரத்தையும் தடுத்து கட்டுப்பாடுகள் விதித்தார். செலவுக்கு பணம் தரவில்லை. நடிகையுடனான உறவை கண்டிப்பாக முறித்துக்கொள்வேன் என்றும் உறுதியளித்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

250 Crore Offer in Vijay Sangeetha Divorce Issue Trichy Suriya Speaks
Photo Credit:

நடிகையே பகிர்ந்திருந்தார்: அதன் காரணமாக பெரிய மன உளைச்சலில் இருந்தேன். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்ததால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தார். அதனை நடிகையே பகிரவும் செய்திருந்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதற்காக அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகைக்கும், எனது கணவருக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்குவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்

கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் மனதளவில் என்னை பிரிந்து வாழ்ந்தார்.நடிகையுடன் அவர் உறவில் இருந்ததால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.நடிகையுடன் உறவை முறித்துக்கொள்வதாக உறுதி கொடுத்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை என்னை நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு அனுமதியளித்து உத்தரவிட வேண்டும்" என பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

Also Read
Thaai Kizhavi Day 6 Box Office - தாய் கிழவி 6ஆவது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்புதே பாஸ்
Thaai Kizhavi Day 6 Box Office - தாய் கிழவி 6ஆவது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்புதே பாஸ்

விஜய்யின் அமைதி: இந்த விவகாரம் பெரிய பூகம்பத்தை திரைத்துறையில் ஏற்படுத்தியது. பலரும் விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து தங்களது விமர்சனத்தை முன்வைத்தார்கள். அதற்கு விஜய்யின் ரசிகர்கள் முடிந்த அளவு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.சோஷியல் மீடியாவே இந்த விஷயத்தால் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட விஜய்யோ இதுவரை எதுவும் பேசாமல் இருக்கிறார். சங்கீதாவும் மனுத்தாக்கல் செய்துவிட்டு சைலெண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா இந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.

சூர்யா பேட்டி: தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "250 கோடி ரூபாய் தருகிறேன். விவாகரத்து எல்லாம் கொடுக்க வேண்டாம். பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். லண்டனிலேயே இருந்துகொள்ளுங்கள். சென்னைக்கு வர வேண்டாம். வேறு எந்த பிரச்னையையும் கிளப்ப வேண்டாம் என விஜய் தரப்பு கூறியிருக்கிறது. இது விவாகரத்துக்காக அவர் செய்யவில்லை சங்கீதாவை அமைதிப்படுத்துவதற்காக செய்திருக்கிறார். அதற்கு சங்கீதா ஒத்து வரவில்லை. இத்தனை நாட்கள் விஜய்க்காக சங்கீதாவிடம் ஷோபாவும், எஸ்.ஏ.சியும் பேசாமல் இருந்தார்கள். இப்போது போட்டு அழுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X