பாஸ் வெற்றி எதிரொலி-மீண்டும் காமெடியில் குதிக்கும் ஆர்யா

By Staff

Nayantara and Arya
பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப் படமாகியுள்ளதால் குஷியாகியுள்ள ஆர்யா, காமெடியில் மீண்டும் கலக்க முடிவு செய்துள்ளார்.

எல்லா ஹீரோக்களுக்கும் நடிப்பு வரும், ஆக்ஷன் கூட வரும், ஆனால் காமெடி அனைவருக்கும் பொருந்தாது. சிலருக்கு மட்டுமே அதிலும் வெற்றி கைகூடும். அந்த வகையில் வெற்றிகரமான காமெடிக் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் ஆர்யா.

அவர் நடிப்பில் உருவான முதல் முழுநீள காமெடிப் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதால் மீண்டும் ஒரு காமெடிப் படத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தையும் பாஸ் என்கிற பாஸ்கரனை இயக்கிய ராஜேஷே இயக்கவுள்ளார். விரைவில் நாயகியை தீர்மானிக்கவுள்ளனராம்.

இந்த கேப்புக்குள் தனது தயாரிப்பில் உருவாகியுள்ள படித்துறையை பக்காவான விருதுப் படமாக மாற்றி விட்டார் ஆர்யா. தேசிய விருதுக்கும் அனுப்பி வைக்க மும்முரமாக களம் இறங்கியுள்ளாராம்.

ஆக்ஷனிலும் முத்திரை பதித்து விட்டாயிற்று, ஆர்ட் பட நாயகனாகவும் மதராசப்பட்டினத்தில் கலக்கியாயிற்று. அடுத்து காமெடியிலும் புயலைக் கிளப்ப முடிவு செய்து விட்டார் ஆர்யா. நல்லா வயிறு வலிக்க சிரிங்கய்யா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X