ஆர்யா தொடங்கி வைத்த ஹை-ஸ்ட்ரீட் சலூன்-ஸ்பா
நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, ஆர் கே, ஆர்யா, பிரசன்னா போன்ற முக்கிய நடிகர்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் செந்தில்குமார்.
இந்த நடிகர்களின் சமீபத்திய படங்களில் அவர்களுக்கு பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் இவர்தான்.
இப்போது சென்னை சாலிகிராமத்தில் (எஸ்எஸ்ஆர் பங்கஜம் தியேட்டர் அருகில்) ஹை ஸ்ட்ரீட் எனும் புதிய சலூன் மற்றும் ஸ்பா மையத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த அழகு நிலையத்தை இன்று காலை திறந்துவைத்தார் பிரபல நடிகர் ஆர்யா. முதல் வாடிக்கையாளராக தானே முடிவெட்டிக் கொண்டு, செந்திலை வாழ்த்தினார்.
ஆர்யா வந்ததை அறிந்ததும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர் அந்தப் பகுதியில்.
Comments


Click it and Unblock the Notifications