அடுத்த ஜென்மத்தில் பத்திரிகையாளராக ஆசை! - அமிதாப்

குறிப்பிட்ட ஒரு குழும பத்திரிகைகளுடன் அவருக்கிருந்த பிணக்கு பாலிவுட் அறிந்ததே.
ஆனாலும் அமிதாப்பின் ஆசையோ, ஒரு பத்திரிகையாளராவதுதானாம். இதுகுறித்து அவர் சமீபத்தில் இப்படிச் சொன்னார்:
எனக்கு மிகவும் விருப்பமானது பத்திரிகையாளர் பணிதான். ஆனால் இந்த ஜென்மத்தில் இனி அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் இந்த ஆசை நிறைவேறிவிடும் என நம்புகிறேன்..." என்றார்.
ஏன் இந்த ஆசை என்று கேட்டபோது, "ஒருவர் எழுதிக் கொடுத்த வசனங்களை எந்த சொந்தக் கருத்துமின்றி கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பதைவிட, சுயமாக எழுதுவதில் உள்ள திருப்தி அலாதியானது" என்றார்.
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
Comments


Click it and Unblock the Notifications