அமீர் படத்தில் பரத்!

By Chakra

Bharath and Madalasa Sharma
அதாவது அமீர் இயக்கும் படத்தில் பரத் நடிக்கிறாரோ என நினைக்க வேண்டாம். இது வேறு.

அமீர் சொந்தமாகப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பரத் நடிக்கிறார், ஹீரோக்களில் ஒருவராக. இப்படிச் சொல்லக் காரணம், இந்தப் படத்தில் ஏற்கெனவே ஒரு ஹீரோ உள்ளார்.. அவர் அமீர்!

தனது டீம் ஒர்க் புரொடக்ஷன் சார்பில் அமீர் தயாரிக்கும் இந்தப் படத்தை, முகவரி, தொட்டி ஜெயா படங்களை இயக்கிய துரை இயக்குகிறார்.

பரத்தைப் பொறுத்தவரை இது அவருக்கு ஒரு தங்கமான வாய்ப்பு. காரணம், தொடர்ந்து அவர் நடித்த எல்லாப் படங்களுமே தோல்விதான். கண்டேன் காதலை மட்டும் சற்றே காப்பாற்றியது.

கடைசியாக அவர் நடித்து வெளியான தம்பிக்கு இந்த ஊரு அவுட்டானதில், அவரது திருத்தணி படத்துக்கு பைனான்ஸ் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டார்கள்.

எனவே படங்களே இல்லாமல் சும்மா இருந்தவருக்கு இந்த புளியங்கொம்பு வாய்ப்பு கிடைக்க மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்போது பார்ப்போரிடமெல்லாம் அமீர் புகழ் பாடுவதை ஒரு கூடுதல் வேலையாகவே வைத்துக் கொண்டுள்ளார் பரத்.

அதெல்லாம் சரிதான்... அந்த 'சின்னத் தளபதி' பட்டத்தை இன்னும் கன்டினியூ பண்றீங்களா பரத்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X