கடவுள் அவதாரமெடுக்கும் தனுஷ்!

மலையாள பட உலகின் வெற்றிப் பட இயக்குநர்களில் ஒருவர் ரஞ்சித். சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்துள்ள திரைக்தா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன்- ஸ்ரீவித்யா காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.
பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இவர் எடுக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏற்கெனவே இந்தப் பாணியில் இவர் எடுத்த படங்கள்தான் நந்தனம் மற்றும் ராவணபிரபு.
இதில் நந்தனம் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ரஞ்சித். மலையாளத்தில் பிருத்விராஜூம், நவ்யா நாயரும் ஜோடியாக அறிமுகமான முதல்படம் இது. ஷோகன் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
தமிழ்ப் படத்திலும் பிருத்விராஜே நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ப்ரியாமணி.
இந்தப் படத்தில் விசேஷம் தனுஷ் கெளரவ வேடத்தில் நடிப்பதுதான். காதலர்களைச் சேர்த்து வைக்கும் கடவுளாக வருகிறார் இந்தப் படத்தில் தனுஷ்.
இந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்ட தனுஷ், இயக்குநர் தன்னை அந்த வேடத்துக்கு அழைத்ததும் ஒப்புக் கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











