twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலுடன் நடிக்க ஆசை-ஜாக்கி சான்

    By Staff
    |

    Karunanidhi,kamal and Jackie chan
    தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் சிடி-கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதை முதல்வர் கருணாநிதி வெளியிட ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஜாக்கி சான் பெற்றுக் கொண்டு பேசினார். அவர் கூறுகையி்ல்,

    நான் இந்த விழாவில் நான் கலந்துகொள்வதற்கு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான் காரணம். அவரை எனக்கு 25 வருடங்களாக தெரியும்.

    நான் நடித்த பல படங்களை அவர் இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து என் படங்களை அவர் இந்தியாவில் வெளியிட வேண்டும். அப்படி செய்தால்தான் நான் அடிக்கடி சென்னை வர முடியும். மீண்டும் மீண்டும் நான் சென்னைக்கு வருவேன்.

    முதல்வர் கருணாநிதி பற்றி நான் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். சமுகத்துக்கும் சினிமாவுக்கும் அவர் நிறைய சேவை செய்து இருக்கிறார்.

    இங்கே அமர்ந்துள்ள அமிதாப்பச்சன் சூப்பர்ஸ்டாருக்கு எல்லாம் சூப்பர்ஸ்டார்.

    தசாவதாரம் பட காட்சிகளை பத்து நிமிடங்கள் பார்த்தேன். வாவ்...வாவ்...வாவ்... நானும் கமலஹாசன், அமிதாப்பச்சனுடன் இணைந்து பணிபுரிய ஆசைப்படுகிறேன்.

    நானும் ஒரு நடிகன் தான். எனக்கும் நடிக்கத் தெரியும். பாட தெரியும். சண்டை போட தெரியும். டைம் இருந்தால், கூப்பிடுங்கள், ப்ளீஸ்....

    நாம் சேர்ந்து படம் பண்ணலாம். நடிக்க வேண்டிய காட்சிகளில், நீங்கள் இருவரும் நடியுங்கள். காதல் காட்சிகளை மட்டும் எனக்கு கொடுத்து விடுங்கள். நான் நடிக்கிறேன் என்று சொல்விட்டு அடக்க முடியாமல் சிரிக்க, மேடையில் இருந்த கருணாநிதி, கமல், அமிதாப் உள்ளி்ட்டவர்களும் அவரது பேச்சை கைதட்டி வெகுவாக ரசித்தனர்.

    அமிதாப்பச்சன் பேசுகையில்,

    எனக்கு முதல் விருது கிடைத்தது சென்னையில்தான் கிடைத்தது. சவுத் ஹிந்துஸ்தானி' என்ற படத்துக்காக, கலைஞர் கருணாநிதி கையினால் அந்த விருதை பெற்றேன்.

    நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், கமலஹாசனை சந்திப்பேன். நாங்கள் இருவரும் ஒன்றரை படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். அதில், ஒரு படம் திரைக்கு வந்தது. இன்னொரு அரை படம் வெளிவரவில்லை.

    கமலஹாசன், திறமையான நடிகர் மட்டுமல்ல. தனித்துவமான மனிதர். தசாவதாரத்தை பார்த்துவிட்டு ஆச்சரியமாக இருந்தது, பொறாமையாக இருக்கிறது. எங்களால் செய்ய முடியாததை செய்பவர் தான் கமல் என்றார்.

    மம்முட்டி பேசுகையில்,

    இந்த விழாவுக்கு நான் வந்ததே, மேடையில் அமர்ந்திருக்கும் இவர்களை எல்லாம் பார்க்கத்தான். உங்களை (ரசிகர்களை) மாதிரிதான் நானும் பார்க்க ஆசைப்பட்டேன். என்னை இங்கே உட்கார வைத்துவிட்டார்கள். கமலஹாசனுக்கு, நான் ரொம்ப பழைய ரசிகன்.

    நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய படங்களை பார்த்து, நம்மை மாதிரியே ஒரு ஆள் நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று நினைப்பேன். அவர் நிறைய சாதனைகளை படைத்து விட்டார். பத்து வேடங்களில் நடித்தவர், உலகிலேயே யாரும் இல்லை. இது, உலக சாதனை.

    அவருடைய சாதனைகளுக்கு, கடின உழைப்பும், விடா முயற்சியும்தான் காரணம். ஒரு படத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. கமலஹாசன் ஒரே படத்தில் பத்து வேடங்களில் நடித்து இருக்கிறார்.
    இது, பேசும் படம் மட்டுமல்ல. பேசப்படும் படம் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X