ஜாக்கிசானின் நல்ல உள்ளம்.. கமல் சிலாகிப்பு

சென்னையில் ஜாக்கி சான் பங்கேற்ற தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் பேசியதாவது:
பழகிய சில நிமிடங்களிலேயே ஜாக்கிசான் என் நண்பர் என்று சொல்லும் தைரியத்தை அவர் எனக்கு கொடுத்து விட்டார். ஒரே பிரசவத்தில் பத்து பிள்ளைகள் பெற்ற பிள்ளையை பார்த்து குதூகலிக்கிற தாயை போன்றவர் முதல்வர் கலைஞர். அவருடைய பாராட்டுகள், எனக்கு பல்சுவை விருந்து போல் இருந்தது.
கே.எஸ்.ரவிகுமாரை சிகரத்தில் தூக்கி வைக்கும் படமாக தசாவதாரம் அமையும்.
இந்த படத்தை பற்றிய செய்திகளை இரண்டு வருட காலமாக இருட்டடிப்பு செய்தோம். இனி, அவைகள் ஒவ்வொன்றாக வெளிவரும். படத்தை பற்றிய சுவாரஸ்யங்கள் குறையக்கூடாது என்பதற்காகத்தான், செய்திகளை பதுக்கி வைத்தோம்.
தசாவதாரம் படத்தின் சில காட்சிகளை கலைஞர் பார்த்துவிட்டு பாராட்டினார். நான் இந்த படத்துக்காக உழைத்த உழைப்பில் ஏற்பட்ட அசதிகளை எல்லாம் அவருடைய பாராட்டு ஆனந்தமாக மாற்றிவிட்டது.
நாம் இனிமேல் கைகோர்த்தபடி நடக்கலாம் என்று கூறியதன் மூலம் ஜாக்கிசானின் நல்ல உள்ளம் புரிந்தது. அவருடைய எளிமை என்னை கவர்ந்தது. அவருடைய மனிதநேயம் என்னை கவர்ந்தது. இன்று முதல் எங்கள் நட்பு தொடரும் என்றார் கமல்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், நடிகைகள் ஹேமாமாலினி, ஜெயப்பிரதா, மல்லிகா ஷெராவத், ஆசின், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை நடிகை ஷோபனா தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications











