5 நாயகிகளுடன் ரஜினி ஆட்டம்!

By Staff

Trisha
குசேலன் படத்தில் இடம் பெறும் ரஜினியின் கனவுப் பாடலில், இப்போது ஐந்து நாயகிகள் இணைந்து ரஜினியுடன் ஆடுகின்றனராம்.

குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியின் காட்சிகளை படு பிரமாண்டமாக எடுக்கும் இயக்குநர் பி.வாசு, ரஜினிக்கு ஒரு கனவுப் பாடலையும் வைத்துள்ளார்.

இப்பாடலில், ரஜினிகாந்த் நயனதாரா, மம்தா மோகன்தாஸ், ஸ்னேகா ஆகியோருடன் ஆடிப் பாடுவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது இவர்களுடன் திரிஷா, இலியானாவையும் சேர்த்துள்ளார் வாசு. இதனால் ஐந்து நிமிடமே வரும் இப்பாடலில், ஐந்து நாயகிகளுடன் ஆடிப் பாடுகிறார் ரஜினி.

ஹைதராபாத்தில் உள்ல ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கனவுப் பாடலில் ஆடிப் பாடுவதற்காக ஏற்கனவே நயனதாராவும், திரிஷாவும் ஹைதராபாத் போய் சேர்ந்து விட்டனர். அடுத்து ஸ்னேகா, மம்தா மோகன்தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படம் பிடிக்கவுள்ளார் வாசு.

மேலும், இலியானாவையும் இழுக்க வாசு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் இலியானாவை முயன்றார் வாசு. ஆனால் இலியானா மறுத்து விட்டார். இதையடுத்தே நயனதாராவை புக் செய்தனர். இப்போது ஒரு பாடல் காட்சிக்காக இலியானாவை அணுகியுள்ளார் வாசு.

தற்போது பாடல் காட்சி தவிர ரஜினி, ஜெகபதி பாபு, மீனா, நயனதாரா, வடிவேலு தொடர்பான காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறார் வாசு.

இந்தக் காட்சிகளில் ஆயிரக்கணக்கான ஜூனியர் நடிகர், நடிகையர் பங்கேற்றுள்ளனராம். இந்தக் காட்சிகளை முடித்து விட்டு கனவுப் பாடல் காட்சியை ஷூட் செய்யவுள்ளனராம்.

தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் பகுதி மனித நடமாட்டமே இல்லாத பாலைவனம் போன்ற இடமாம். இதனால் ரஜினி உள்ளிட்ட கலைஞர்களின் வசதிக்காக 7 கேரவன்களை வாடகைக்கு அமர்த்த திட்டமிட்டார் வாசு. ஆனால் ரஜினி அதை மறுத்து விட்டாராம்.

சின்னக் குடிசை போட்டுக் கொடுத்தால் போதும், அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறேன் என்று சிம்பிளாக கூறி விட்டாராம். இதனால் பகல் முழுவதும் டென்டு கொட்டாயில்தான் ரஜினி உள்ளிட்டோர் தங்கியுள்ளனராம். இரவில் மட்டும் ஹோட்டலுக்குப் போய் விடுகிறார்கள். அதுவும் கூட பிலிம் சிட்டி வளாகத்திலேயே உள்ள சாதாரண ஹோட்டல்தானாம்.

ரஜினியே இப்படி சிம்பிளாக இருப்பதால் மற்ற கலைஞர்களும் கூட ஆடம்பர வசதிகளை உதறி விட்டார்களாம்.

ஏப்ரல் முதல் வாரம் வரை ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெறுமாம். இந்தப் படப்பிடிப்பு தெலுங்கு குசேலனுக்காக நடக்கிறது. அடுத்து பொள்ளாச்சிக்கு இடம் பெயறுகிறார்கள். அங்கு தமிழ்ப் பதிப்புக்கான காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X