இந்தூரில் சல்மான் கான் ரசிகர்கள் பெரும் ரகளை

இந்தூரில், உள்ள நேரு ஸ்டேடியத்தில் சல்மான் கான் கலந்து கொள்ளும் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து சல்மானின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ஆனால் ஐந்து மணி நேரம் தாமதமாக வந்தார் சல்மான். லேட்டானாலும் விளையாடிக் கலக்குவாரே என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் மனம் தளராமல் காத்திருந்தனர்.
சல்மான் கான் வந்ததும், ஸ்டேடியத்தை நிறைத்திருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். அதன் பின்னர் டாடா காட்ட விட்டு கிளம்பிப் போய் விட்டார்.
சல்மான் கான் ஆடுவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இதனால் பெரும் ஏமாற்றமடைந்தது. அது கோபமாக மாறி ஸ்டேடியத்தில் இருந்த இருக்கைகளைத் தூக்கிப் போட்டு பந்தாடி விட்டனர்.
இதையடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சிம்லா கிளப் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தது. போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது அனைவரும் திமுதிமுவென ஓடியதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்தூர் சல்மான் கான் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications