தமிழுக்கு வரும் ராணா!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் டி.ராமா நாயுடுவின் பேரன் ராணா. வெங்கடேஷின் உறவினர். ராணாவின் தந்தை சுரேஷும் பெரிய தயாரிப்பாளர். சமீபத்தில் ராணா நடித்து வெளியான லீடர் பெரும் வெற்றி பெற்றது.
இப்போது, ராணாவை தமிழுக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது.
இந்தப் படத்துக்காக செல்வராகவனுக்கு பெரும் தொகை அட்வான்ஸாக தரப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. இப்போது அதை மறுத்துள்ள செல்வராகவன், ஒரு புதுமுக நடிகையை நாயகியாக அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் விக்ரமின் படத்தை முடித்த கையோடு, இந்தப் புதிய படத்தில் மும்முரமாக இறங்குகிறார் செல்வா.
இதுகுறித்து ராணா கூறுகையில், "தமிழில் ஒரு நேரடிப் படம் நடிப்பதே த்ரில்லாக உள்ளது. செல்வா மீது எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது..." என்றார்.
ஏற்கெனவே வெங்டேஷ் நடித்த ஒரு சூப்பர் ஹிட் படத்தை தெலுங்கில் தந்தவர் செல்வராகவன் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











