சூர்யாவுக்கு 65, சிம்ரனுக்கு 60!

By Staff

Simran
கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா 65 வயது தாத்தா வேடத்திலும், சிம்ரன் 60 வயது குடு குடு பாட்டியாகவும் சூப்பர் கெட்டப்பில் வருகிறார்களாம்.

சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனும் நடிக்கிறார், அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக, மகன் சூர்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் என்பது பழைய செய்தி.

புதிய செய்தி என்னவென்றால் அம்மா சிம்ரனுக்கு வயது 60. பாட்டி கெட்டப் போட்டு அசத்தலாக நடிக்கிறாராம் சிம்ரன்.

இதுவரை மேக்கப் போட்டு நடித்துள்ள சிம்ரன் முதல் முறையாக பாட்டி மேக்கப் போட்டு கலக்குகிறார்.

படத்தில் சிம்ரன் வரும் காட்சிகள் பிளாஷ்பேக்கில் நடப்பது போல உள்ளதாம். பாட்டி மேக்கப் சிம்ஸுக்கு படு பொருத்தமாக வந்துள்ளதாம். பார்க்க பாட்டி மாதிரியே இருக்காங்களே என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேரும் வியந்து போனார்களாம்.

இந்தப் படத்தில் சூர்யா பல வித கெட்டப்களில் வருகிறார். சிம்ரனின் ஜோடியாக வரும் சூர்யாவுக்கு 65 வயதாம். அவருக்கும் மேக்கப் கன கச்சிதமாக அமைந்துள்ளதாம்.

படத்தின் இடைவெளைக்கு முன்பு வரை சிம்ரன் ராஜ்ஜியமாகத்தான் படம் இருக்குமாம். சூர்யாவின் ஜோடியாக சமீரா ரெட்டியும், திவ்யாவும் கலகலக்க வைக்கின்றனர்.

படத்தை ஏப்ரல் மாதத்தில் திரைக்குக் கொண்டு வர முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஷூட்டிங் முடியாததால் மே மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X