'சிங்கம்' சூர்யா!

கடந்த திங்களன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சூர்யாவின் உறவுக்காரர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படம் இது.
ஹரி - சூர்யா கூட்டணி ஏற்கெனவே ஆறு, வேல் ஆகிய இரு கமர்ஷியல் படங்கள் தந்துள்ளது.
இந்தப் புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா. காமெடிக்கு விவேக், வில்லத்தனத்துக்கு பிரகாஷ் ராஜ் என டிபிகல் கமர்ஷியல் பார்முலாவை நடிகர்கள் தேர்விலேயே காட்டிவிட்டார் ஹரி.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளராக நிகில் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications