'கொத்தி' எடுக்கும் சீயான்!

இயக்குநர் சுசி.கணேசன் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, விக்ரம் வித்தியாசமான கெட்டப்களில் நடித்து வரும் படம் கந்தசாமி. படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கலக்கியிருப்பவர் ஷ்ரியா.
வித்தியாசமான கதை என்று கலைப்புலி தாணு, சுசி.கணேன், விக்ரம் கந்தசாமி கதை குறிதது சிலாகித்துப் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தில் ஒரு வித்தியாசமான சண்டைக் காட்சி இடம் பெறுகிறதாம்.
அது ஒரு சண்டைக் காட்சியில் விக்ரம் சேவல் வடிவில் வந்து எதிரிகளைப் பந்தாடுகிறாராம். அதாவது சேவல் போல கொத்திக் கொத்தியே எதிரிகளை விரட்டி அடிக்கிறாராம். இப்படி ஒரு சண்டைக் காட்சி எங்குமே இதுவரை பார்த்திராதது, படு வித்தியாசமாக இதை இயக்குநர் சுசி.கணேசன் படமாக்கியுள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் விக்ரம்.
கந்தசாமி படம் தனக்கும், சுசி.கணேசனுக்கும் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் விக்ரம். அதேபோன்ற நம்பிக்கையுடன் இருக்கும் இன்னொருவர் நாயகி ஷ்ரியா.
சிவாஜி படத்திற்குப் பிறகு டல் ஆகி விட்ட ஷ்ரியா, இப்படத்ைத பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்.
எல்லோரையும் காப்பாத்திருப்பா கந்தசாமி!


Click it and Unblock the Notifications











