மணிரத்னம் படத்தில் விக்ரம்?

அதேபோல வெளியில் நிறைய விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தென்பட்டாலும் அங்கெல்லாம் தனது புதுப்படங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து மௌனமாகவே இருப்பார் இந்த 'மௌன'ரத்னம்.
இதோ குருவுக்குப் பிறகு தனது புதுப்படத்துக்கான அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டு படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார் மனிதர்.
இந்தப் படமும் மணிரத்னத்தின் சமீபத்திய வழக்கம் போல, இந்தி-தமிழ் என இரு மொழிகளிலும் வரப்போகிற படம்தான்.
இந்திப் படத்தில் ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சன் ஜோடி. தமிழ் படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன. கதாநாயகி அதே ஐஸ்வர்யாதான்.
எனவே, பிரசாந்த், ரஜினிகாந்த்துக்கு அடுத்து ஐஸ்வர்யா ஜோடி சேரப் போகும் 3வது தமிழ் நடிகர் என்ற புதிய பெருமை விக்ரமுக்குக் கிடைக்கவுள்ளது.
இந்தப் படத்தைப் பற்றிய இன்னொரு தகவல்-
படத்தில் ஒரு முக்கியமான ஆனால் கவுரவ வேடம் உள்ளதாம். இந்தியில் அந்தப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறவர் விக்ரம் என்றும், தமிழில் அதை அபிஷேக் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கந்தசாமி படப்பிடிப்பிலிருக்கும் விக்ரமிடம் கேட்ட போது, மணிரத்னம் பாணியில் அழுத்தமான ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.
மணிரத்னம் படத்தில் நடிப்பதாகக் பேச்சு கிளம்பிய உடனே பேசுவதையே குறைத்துக் கொண்டார் போலிருக்கிறது!


Click it and Unblock the Notifications











