twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தசாவதாரம் பார்க்கும் ஜார்ஜ் புஷ்!

    By Staff
    |

    Kamal with Asin
    உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்கு வசதியாக, ஆங்கில சப் டைட்டிலுடன் அவருக்கு அனுப்பி வைக்கவுள்ளனராம்.

    பெரும் பொருட் செலவில், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் ஜாக்கி சானை வரவழைத்து ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடத்தினர்.

    இப்படத்தில் ஆசின், மல்லிகா ஷெராவத், ஹேமமாலினி, ஜெயப்பிரதா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் நெப்போலியன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கமல்ஹாசன் போட்டுள்ள பத்து வேடங்களில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வேடமும் ஒன்று.

    இதுதவிர 8 அடி உயர கருப்பர், 90 வயது பாட்டி உள்ளிட்ட வேடங்களும் இதில் அடக்கம்.

    இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்புக்கு ஒரு வித்தியாசமான ஐடியா தோன்றியது. அதாவது படத்தில் கமல்ஹாசன், புஷ் வேடத்தில் நடித்திருப்பதால் அவருக்கு படத்தை அனுப்பி வைத்து, பார்க்க வைத்தால் என்ன என்று தோன்றியது.

    இதையடுத்து அமெரிக்காவின், லூசியானா மாகாண ஆளுநரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டாலை தயாரிப்பாளர் தரப்பு அமெரிக்காவில் உள்ளவர்கள் மூலம் அணுகியது. புஷ் படம் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாபி ஜிண்டாலை கேட்டுக கொண்டனர். அவரும், ஆங்கில சப் டைட்டிலுடன் படத்தை அனுப்பி வைக்குமாறு கூறினாராம்.

    இதையடுத்து படத்தின் டிரைலருடன், படம் குறித்த குறிப்புகளையும் இணைத்து பாபிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் மூலம் தசாவதாரம் டிரைலரை புஷ் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    டிரைலரில் ஜார்ஜ் புஷ் வேடத்தில் கமல்ஹாசன் இருப்பது போன்ற காட்சிகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனவாம்.

    மேலும் தசாவதாரம் படத்தின் ஒரு பிரிண்ட்டையும் ஆங்கில சப் டைட்டிலுடன் ரெடி செய்து வருகின்றனர். இதுவும் புஷ்ஷுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதேபோல ஜாக்கி சான் பார்ப்பதற்கு வசதியாக அவருக்கும் ஒரு பிரிண்ட் அனுப்பி வைக்கப்படவுள்ளதாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X