ரசிகர்கள் ரகளை: மம்முட்டியின் துபாய் கலை நிகழ்ச்சி ரத்து!

துபாய் விமான நிலைய கண்காட்சி திடலில், மலையாள நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒரு மலையாள டி.வி. சேனல் ஏற்பாடு செய்திருந்தது.
தங்கள் அபிமான நடிகரான மம்முட்டியை பார்ப்பதற்காக, துபாயில் வசிக்கும் ஏராளமான கேரள ரசிகர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சி நடந்த மைதானத்தில் 7 ஆயிரத்து 500 பேர் மட்டுமே இருக்க முடியும். ஆனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து விட்டனர். டிக்கெட் எடுக்காதவர்களும் கூட, மைதானத்துக்குள் நுழைய முயற்சித்தனர். அதே நேரத்தில், 70 தனியார் பாதுகாவலர்கள் மட்டுமே நுழைவு வாயில்களில் இருந்தனர்.
ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து அமளியும், கலாட்டாவும் ஏற்பட்டதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதில், ஏராளமான ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த அமளியால், நடிகர் மம்முட்டி கலை நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக மலையாள டி.வி. சேனலின் நிர்வாக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர். துபாயில் ஒரு கலைநிகழ்ச்சியில் இந்த அளவு வன்முறை வெடித்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது இதுவே முதல் முறை.


Click it and Unblock the Notifications











