யாவரும் கேளிர்... உறுதி செய்தார் கமல்!

உடனே சிலர் அதை மறுத்து செய்தி வெளியிடவும் செய்தனர். ஆனால் நமது செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன்.
தனது அடுத்த படத்தின் தலைப்பு யாவரும் கேளிர் என்பது உண்மைதான் என அவர் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பது த்ரிஷா என்பதும் உறுதியாகியுள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் துவங்குகிறது. அக்டோபர் 2010- தீபாவளி வெளியீடாக வருகிறது யாவரும் கேளிர்.
ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications