போக்கிரியில் பிரபு தேவா மும்முரம்

By Staff

Prabhu Deva
சுத்தமாக இனி நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் பிரபுதேவா. வில்லு வெளியீட்டுக்குப் பின்னர் இப்போது இந்தியில் உருவாகி வரும் போக்கிரி ரீமேக்கில் அவர் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த திடீர் நடிகர் பிரபுதேவா. ஆனால் தனது முத்திரையை ஆழமாக பதித்தவர். பிரபுதேவா மிகச் சிறந்த நடிகர் என்று பழம்பெரும் இயக்குநர் மகேந்திரனே வாயார பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநரானார் பிரபுதேவா. நடிப்பு, நடனத்தில் முத்திரை பதித்த அவர் இயக்கத்திலும் அசத்தினார்.

விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு என இரு ஹிட்களைக் கொடுத்த பிரபுதேவாவை மீண்டும் நடிகராக்க பலமுனைகளிலும் முயற்சி நடந்தது. தங்கர் பச்சான் இதில் வெற்றி பெற்றதாக கருதப்பட்டது.

அவருடைய அடுத்த படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் பிரபுதேவா. ஆனால் தற்போது அதை மறுத்து விட்டார். இதற்குக் காரணம், இனிமேல் நடிக்க வேண்டாம், இயகத்தை மட்டும் கவனித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்ததே காரணம்.

தற்போது சல்மான் கானை வைதது இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கும் போக்கிரி படத்தில் தனது முழு கவனததையும் திருப்பியுள்ளார் பிரபுதேவா.

சல்மான் கானுக்கு ஜோடியாக ஆயிஷா தாக்கியா நடித்துள்ளார். வினோத் கண்ணா, சல்மானின் தந்தையாக நடிக்கிறார்.

இப்படத்தை பிரமாண்டமான முறையில் உருவாக்கவும், ரிலீஸ் செய்யவும், ஹிட் ஆக்கவும் தீவிரமாக உள்ளாராம் சல்மான்.

கஜினி போட்ட போட்டை விட படு பிரமாண்டமாக இந்தப் படத்தைக் கொடுக்க பிரபுதேவாவும் ஆர்வமாக உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X