இனிமையான தனிமை-சல்மான்

தனிமையின் இனிமை குறித்து தனது பிளாக்கில் சல்மான் கான் இப்படிக் கூறியுள்ளார்...
தனிமையில் உருவாவதுதான் கலை. அப்படி உருவாகும் கலைதான் மக்களிடம் வைக்கப்படுகிறது. இதுபோன்ற தனிமையான தருணங்கள்தான், என்னைப் போன்ற திரைப்பட கலைஞர்களுக்கு நிறைய யோசிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. சுய ஆய்வுக்கும் தனிமை மிகவும் அவசியமானது, அற்புதமானது.
ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல், நல்ல மனிதர்களாகவும் நாம் மாற தனிமை மிகவும் அவசியம். என்னைப் போன்ற திரைப்படக் கலைஞர்களுக்கு எப்போதுமே ஒரு கூட்டம் கூடவே இருக்கும். பிசியான ஷெட்யூல்களுக்கு இடையில் நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கும்போது கிடைக்கிற சிறிது நேர தனிமை கூட மிகப் பெரிய விஷயமாகும்.
எனது தந்தையும், சிறந்த கதாசிரியருமான சலீம் கான் ஒருமுறை என்னிடம் கூறினார், ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் தனிமைதான் அவனை மேலும் சிறந்த மனிதனாக்க உதவுகிறது. அவனது திறமைகள், கிரியேட்டிவிட்டி ஆகியவற்றை வெளிக் கொணர உதவுகிறது என்றார்.
அமீர்கான் கூட எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் அந்த தனிமையான நேரங்கள்தான் எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் என்று கூறியுள்ளார் ...
இப்படிப் போகிறது சல்மான் கானின் தனிமை புராணம். வர வர சல்மான் தத்துவமானாகி வருகிறார்!.


Click it and Unblock the Notifications











