மலையாளத்தில் 'சோலோ ஹீரோ'வான சரத்!

பழஸ்ஸி ராஜாவில் அவருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த மலையாளத் திரையுலகினர், தொடர்ந்து பெரிய வாய்ப்புகளை அவருக்கு வழங்கி வருகிறார்கள்.
மோகன் லாலுடன் கிறிஸ்டியன் பிரதர்ஸ், குஞ்சாக்கோ போபனுடன் ஓரிடத்தொரு போஸ்ட்மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சரத். மேலும் 3 படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளாராம்.
இந்த நிலையில் அவரை தனி ஹீரோவாக வைத்து அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றைத் தயாரிக்கிறார் மலையாளத்தின் முன்னணி நடிகர் திலீப்.
இந்தப் படத்துக்கு மெட்ரோ என்று பெயரிட்டுள்ளனர். திலீப் தயாரிக்க வியாஸன் எடவங்காட் இயக்குகிறார். இதில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறாராம் சரத்.
இந்தப் படத்துக்குப் பிறகு மேலும் சில மலையாளப் படங்களில் தனி ஹீரோவாக நடிக்கிறார் சரத்.
தமிழில் அவர் கைவசம் விடியல் என்ற படம் மட்டுமே உள்ளது. அதையும் அவர் முதல்பிரதி அடிப்படையில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











