ராஜபக்சே மனுஷனா? சத்யராஜ் ஆவேசம்!

முதல்வர் கருணாநிதியை சந்தித்து கண்ணீர் மல்க உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார் சத்யராஜ்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நான் அவரை உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். தனது உடல் நிலையை கருத்தில்கொண்டு கலைஞர் அவர்கள் உண்ணாவிரத்தை கைவிட வேண்டும்.
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளும், உலக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அதிபர் ராஜபக்சே போர் நிறுத்தம் செய்ய மறுக்கிறார். ராஜபக்சே ஒரு மனிதனே கிடையாது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மிருகம்.
மத்திய அரசு உடனடியாக இலங்கை தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டு போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். கலைஞர் அவர்கள் இந்த வயதிலும் உண்ணாவிரதம் இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு, உடல் நிலையை பாதுகாக்க வேண்டும். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











