உலகம் சுற்றும் வாலிபன் ரீமேக்கில் சுந்தர்?

By Staff

Anjali with Sundhar
எம்ஜிஆரின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் உருவான காலத்தால் அழியாத காவியமான உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மீண்டும் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த முயற்சியில் இறங்கியிருப்பது வேறு யாருமல்ல, இயக்குநராக இருந்து இப்போது வெற்றிப்பட நாயகனாக மாறியிருக்கும் சுந்தர் சி.

எம்ஜிஆர் படத்தை இன்னொரு கதாநாயகனை வைத்து ரீமேக் செய்து வெற்றி பெற்றுவிட முடியுமா, அல்லது அதை மக்கள்தான் ஏற்றுக் கொள்வார்களா... குறைந்த பட்சம் எம்ஜிஆர் பட டைட்டில்களை வைத்த மற்ற நடிகர்களின் படங்களைக் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே...

ரசிகர்களின் இந்த சந்தேகத்தை நேற்று ஆயுதம் செய்வோம் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு வந்திருந்த சுந்தரிடமே கேட்டோம்.

இப்பதான் வளர்ந்துட்டு வர்ற ஹீரோ நான். நீங்க வேற குண்டு போட்டு ஜனங்ககிட்ட வெறுப்ப சம்பாதிக்க வச்சிடாதீங்க. புரட்சித் தலைவர் மாதிரி நம்மால நடிக்க முடியுமா... இல்ல அவரோட கதையை நமக்கேத்த மாதிரி மாத்தினாதான் மக்கள் விடுவாங்களா... ஆனால் அந்த ஸ்டைலில் ஒரு ஜனரஞ்சகமான படம் பண்ணனும்னு ஆசை. அதுக்குள்ள செய்தி பரவிடுச்சு... என்றார்.

இதற்கிடையே உலகம் சுற்றும் வாலிபன் தலைப்பையோ, அதன் ரீமேக்கையோ எந்த வடிவிலும் அனுமதிக்க முடியாது என எம்ஜிஆர் பக்தர்கள் மன்றம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. எம்ஜிஆர் மனித நேய மன்றங்கள் மற்றும் எம்ஜிஆர் மன்றத்தினர் பலரும் இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும், எம்ஜிஆர் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ள எந்தப் படத்தின் டைட்டிலையும் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X