அஜீத்துக்கு சுராங்கனி கிடைக்குமா?

ஆனால் இந்தத் தலைப்பை வேறு ஒருவர் பதிவு செய்து வைத்திருப்பதால், அஜீத் படத்தின் தயாரிப்பாளர்களான சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர், அதே தலைப்பை அஜீத்துக்காக வாங்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் அஜீத்துக்கு நாயகியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிப்பதில் சற்றே தயக்கம் காட்டி வந்தார் அஜீத். காரணம் இயக்குநர் கவுதம், படத்தின் கதையை முழுமையாக அஜீத்துக்கு சொல்லமால் இருந்தார். ஆனால் கடந்த வாரம் ஸ்கிரிப்டை முழுமையாகத் தயார் செய்து அஜீத்துக்குக் கொடுக்க, அதைப் படித்த அஜீத் அடுத்த நாளே தயாரிப்புப் பணிகளைத் துவங்குமாறு தயாரிப்பாளர் ராம் குமாருக்குக் கூறிவிட்டாராம்.
சமூகத்தின் அடித்தட்டு மனிதன் ஒருவன் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னுக்கு வருவதுதான் கதையாம்.
நவம்பர் முதல் தேதி படப்பிடிப்புத் துவங்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications