மீண்டும் பிரிந்த அஜீத்-கெளதம்!

By Sudha

Ajith Kumar
துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். படத்தின் பெயரையும் மங்காத்தா என்று மாற்றியுள்ளனராம். படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு.

அஜீத்துக்காக கெளதம் மேனன் தயார் செய்த கதைதான் துப்பறியும் ஆனந்த். இதில் அஜீத் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. நாயகியாக சமந்தா நடிப்பார் எனவும் கூறப்பட்டிருந்தது.

இப்போது பெரும் மாற்றம். படத்தை இயக்கப் போவது கெளதம் மேனன் இல்லையாம். வெங்கட் பிரபு படத்தை இயக்குவார் என கூறப்பட்டுள்ளது. அஜீத்துக்கும், கெளதம் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடு பெரிதாகி விட்டதால் பிரிவது என முடிவெடுத்து விட்டனராம்.

படத்தின் பெயரையும் கூட மங்காத்தா என்று இப்போதைக்கு மாற்றியுள்ளனர். ஆனால் இந்தப் பெயரும் கூட நிரந்தரமில்லையாம். மாற்றினாலும் மாற்றி விடுவார்களாம்.

படத்தின் நாயகி மாருவாரா அல்லது அதே சமந்தாவா என்று தெரியவில்லை. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

அஜீத்தும், கெளதம் மேனனும் பணியாற்றாமலேயே பிரிவது என்பது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு அசல் படத்துக்காக இருவரும் சேருவதாக இருந்தது. ஆனால் ஆரம்பத்திலேயே பெரும் குழப்பமாக இருந்தாதல் கெளதமை நீக்கி விட்டனர். இப்போது துப்பறியும் ஆனந்த் படத்திற்காக இணைவதாக இருந்து இருவரும் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X