விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும்
நடிகர் விஷாலை பார்க்கவே முடிவதில்லை என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. அப்படி விஷாலுக்கு என்னாச்சு என்று பார்த்தால் தன் அடுத்த படத்திற்கு வித்தியாசமான கெட்அப்பில் வருகிறாராம். அதை யாரும் பார்க்காமல் இருக்கத்தான் இப்படி ஓடி ஒளிகிறாராம்.
இந்த ஒப்பனை மாற்றம் காரணமாக கடந்த 1 மாதமாக கோலிவுட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும் அவர் கலந்து கொள்ளவில்லை.
விஷால் தன் கெட்அப்பாலும், கதாபாத்திரத்தாலும் ரசிகர்களை அசத்தப் போகிறாரார். அது பாலாவின் அவன் இவன் படத்துக்காக. அதனால் தான் பாலா படப்பிடிப்பு முடியும் வரை அவரை யார் கண்ணிலும் குறிப்பாக மீடியா கண்ணில் பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அவன் இவன் படத்திற்கான இசையமைப்பு பணியை யுவன் கச்சிதமாக முடித்துக் கொடுத்து விட்டாராம். படப் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். இதில் இளையராஜா பெரும்பாலான பாடல்களை பாடவிருப்பதாகத் தெரிகிறது.
அவன் இவனில் ஜனனி ஐயரும், மது ஷாலினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரீமா சென் கௌரவ வேடத்தில் வருகிறார். வரும் ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ள இதன் படபிடிப்பு முழுவீச்சில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











