கமலின் பிரமிக்க வைக்கும் ஒப்பந்தங்கள்!

தசாவதாரம் தந்திருக்கும் புதிய தெம்பில், இப்போதைக்கு அப்படி எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பாத கமல்ஹாசன் புத்திசாலித்தனமாகச் செய்திருக்கும் சில ஒப்பந்தங்களைப் பற்றிய 'எக்ஸ்க்ளூசிவ்' தொகுப்புதான் இந்தச் செய்தி!
இந்தப் படத்தை முதல்பிரதி அடிப்படையில் எடுக்கிறார் கமல். நாயகனும் அவரே, இயக்குநரும் அவரே என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
பிரமிட் சாய்மிராதான் இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கப்போகிறார்கள். சில தினங்களாக இந்தப் படத்தை ரூ.100 கோடி செலவில் எடுக்கப்போவதாகக் கமல் கூறி வருகிறார்.
ஆனால் இரு மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் முதல் பிரதியை ரூ.150 கோடிக்கு விற்றிருக்கிறார் கமல்ஹாசன் (சம்பளம் உள்ளிட்ட செலவுத் தொகை மட்டுமே இந்த முதல் பிரதிக் கணக்கில் சேரும்).
இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ள நிலையில், இப்போது கமல் ரூ.100 கோடி மட்டும்தான் செலவு எனக் கூறி வருவது ஏன் எனத் தெரியாமல் விழிக்கிறது சாய்மிரா நிறுவனம். மீதி ரூ. 50 கோடிக்கு என்ன கணக்கு என கமலிடம் கேட்கவும் இந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
வெளிப்படையாகப் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தம் கமல் - சாய்மிராவுக்கிடையே செய்யப்பட்டது போல் தெரிந்தாலும், இதில் சாய்மிராவுக்கே தெரியாத இன்னொரு உள் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தப்படி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து இந்த முதல் பிரதியை தயாரிக்கப்போவது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த உல் ஒப்பந்தப்படி படம் எடுப்பதற்கான முழுத் தொகையையும் வால்ட் டிஸ்னியே வழங்கும். ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரைப் போல ராஜ்கமல் அதை மர்மயோகிக்குக் கையாளும்.
இதற்குப் பிரதியுபகாரமாக, படத்தின் பப்ளிசிட்டி போஸ்டர்களில், வால்ட் டிஸ்னி-ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து வழங்கும், பிரமிட் சாய்மிரா பெருமையுடன் அளிக்கும், உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி - எனப் போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படும்.
அதாவது தென்மாநில மொழிப் படம் ஒன்றின் மூலம் உள்ளே நுழைய இந்தச் செலவைச் செய்கிறது வால்ட் டிஸ்னி. ஆக, செலவில்லாமல், ஆனால் ஒரு மகா பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்.
இந்த புத்திசாலித்தனமான ஒப்பந்தங்கள் அனைத்திலும் கமல்ஹாசனின் மூளையாய் இருந்து செயல்பட்டவர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாயகன், இப்போ நல்ல தெளிவான் பிஸினஸ் நாயகனாகவும் மாறிவிட்டாருங்கோ!


Click it and Unblock the Notifications











