'மொழு மொழு'ன்னு விஷால்!

By Staff

Vishal with Nayanthara
'மொட்டை' ஹீரோக்கள் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள 'மொட்டை' - விஷால்.

தமிழ் சினிமாவில் மொட்டை போட்டுக் கொண்டு நடிப்பது என்பது பேசப்படும் விஷயமாகும். நூறாவது நாள் படத்திற்காக சத்யராஜ் மொட்டை போட்டுக் கொண்டு நடித்து, அது பிரபலமாகியதால் மொட்டை போட்டுக் கொண்டு யாராவது நடித்தால் அந்தப் படமும், அவர்களது கேரக்டரும் பிரபலமாகி விடும்.

தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்கள் பலரும் மொட்டை அடித்து நடித்துள்ளனர். சிவாஜியில் ரஜினி போட்டை மொட்டை படு பாப்புலர் ஆனது.

இப்போதைய இளம் நடிகர்களில் சூர்யா, கஜினிக்காக மொட்டை போட்டார். விஜய், அஜீத் ஆகியோர் இதுவரை மொட்டை போட்டதில்லை. இந்த வரிசையில் இப்போது விஷாலும் மொட்டை அடித்து மொழு மொழுவென மாறியுள்ளார்.

சத்யம் படத்துக்காகத்தான் இந்த மொட்டை. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் விஷால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மொட்டை அடித்துள்ளார்.

வில்லன்களுடன் அவர் மோதும் காட்சியை பிரமிப்பான முறையில் காட்ட விரும்பிய இயக்குநர் ராஜசேகர், விஷாலை மொட்டை அடிக்க வைத்து அந்தக் காட்சியைப் படமாக்கவுள்ளார். சென்னையில் நடைபெறும் கட்சி பொதுக் கூட்டத்தில் வில்லன்களும், விஷாலும் மோதுவது போல இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷால் படு அர்ப்பணிப்புடன் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் பிரமாதமாக வந்துள்ளதாக படக் குழுவினரும் சிலாகித்துக் கூறுகின்றனர்.

இப்படத்தின் வில்லனாக அறிமுகமாகிறார் கன்னடத்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான உபேந்திரா. வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் வித்தியாசமான நடிகர் உபேந்திரா. சத்யம் படத்தில் அவர் அட்டகாசமான ரோலில் நடித்துள்ளாராம்.

விஷாலுக்கு இப்படத்தில் ஜோடி நயன்தாரா. இதுவரை இல்லாத அளவுக்கு படத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறாராம் நயனதாரா.

இந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்கிறார்கள். தெலுங்குப் படத்திற்குப் பெயர் சல்யூட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X