எம்.ஜி.ஆர். ஆன பரத்

பரத், சனா கான் இணைந்து நடிக்கும் படம் தம்பிக்கு இந்த ஊரு. இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்றை சமீபத்தில் பட்டினப்பாக்கம் பகுதியில் படமாக்கினர். இந்தப் பாடல் காட்சியில், மீனவ நண்பன், நம் நாடு படங்களில் வந்த எம்.ஜி.ஆரைப் போன்ற கெட்டப்பில் ஆடிப் பாடினார் பரத்.
இந்தப் பாடல் காட்சிக்காக 80 அடி உயர எம்.ஜி.ஆர். கட் அவுட்டை வைத்திருந்தனர். இதைப் பார்த்து அப்பகுதி மீனவர்களும், குப்பத்து மக்களும் திரண்டு வந்து தங்களது தலைவரின் கட் அவுட்டைப் பார்த்து நெக்குறுகிப் போயினர்.
இப்படி தலைவரின் கட் அவுட் பின்னணியில் பரத்தும், சனா கானும் இணைந்து அட்டகாசமாக ஆடிப் பாடினர். அதை அப்பகுதி மக்கள் கண்டு களித்தனர்.
இந்தப் பாடல் காட்சியில் 60 டான்ஸர்கள், 80 ஆட்டோக்கள், 100 மீன் பாடி வண்டிகளையும் பன்படுத்தினர்.
ஜே.சரவணன், பாஸ்கர் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார். ரஞ்சித், பிரபு, விவேக் ஆகியோரும் படத்தில் உள்ளனர். சரண்யா, நிழல்கள் ரவியும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அடுத்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா பக்கம் கேமராவைத் திருப்பி பாடல் காட்சிகளை சுடவுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











