பிறந்தநாள் கொண்டாடும் பிரசன்னா!

By Staff

Prasanna Birthday Celebration
இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க திறமைசாலி பிரசன்னா. நல்ல ரசனை உள்ள கலைஞர். நடித்தால் ஹீரோதான் என்ற பிடிவாதம் கொள்ளாமல், நல்ல பாத்திரங்களாக இருந்தால் வில்லன் வேடமாகவே இருந்தாலும் அதைத் தயங்காமல் ஏற்பவர்.

பைவ் ஸ்டாரில் ஆரம்பித்து அச்சமுண்டு அச்சமுண்டு வரை தேந்தெடுத்த கதைகள், மனதில் நிற்கும் பாத்திரப் படைப்புகளில் முழு ஈடுபாடு காட்டி நடித்துவருபவர் பிரசன்னா.

இன்று அவருக்குப் பிறந்தநாள்.

காலையில் பெற்றோருடன் வடசென்னை காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்தார் பிரசன்னா. மாலையில் பாணா படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

படக்குழுவினர் அவருக்கு திடீர் இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் பெரிய கேக் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பாணா படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு சக கலைஞர்கள், இயக்குநர் மற்றும் பிஆர்ஓ ஜான் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். தட்ஸ்தமிழ் சார்பில் வாழ்த்துக்களைச் சொன்னோம்.

இந்த ஆண்டு தனக்கு குறிப்பிடத்தக்கதாக அமையும் என்கிறார் பிரசன்னா. அதற்கேற்ப நல்ல கதைக் களங்களுடன் கூடிய படங்களை கைவசம் வைத்துள்ளாராம்.

வாழ்த்துக்கள் பிரசன்னா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X