தசாவதாரம்- பாடல் ரிலீஸ் தள்ளிவைப்பு

By Staff

Kamal
உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரம் படப் பாடல் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அதேபோல படத்தின் ரிலீஸும் மே மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளது.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டாக மார்ச் 14ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா ஏப்ரல் 2ம் தேதிக்குத் தள்ளிப் போயுள்ளது. இதை தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜாக்கி சான் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த தள்ளி வைப்பாம். பாடல் வெளியீடு தள்ளிப் போயிருப்பதால் படமும் மே மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளது. பெரிய படங்களின் பாடல் வெளியீட்டுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகுதான் படத்தை ரிலீஸ் செய்வது வழக்கம்.

ஏப்ரல் 2ம் தேதியன்று சென்னை நேரு உள்ளரங்கத்தில் தசாவதாரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

படத்தை உலகம் முழுவதும் ஆஸ்கர் ரவிச்சந்திரனே நேரடியாக ரிலீஸ் செய்யவுள்ளார். படத்தை முதலில் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்ய ரவிச்சந்திரன் திட்டமிட்டிருந்தார். ஆனால் மே மாதம்தான் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.

மே மாதத்தில் ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பெரிய அளவில் பட ரிலீஸ் இருக்காது. எனவே அந்த சமயத்தில் தசாவதாரத்தைக் களத்தில் இறக்கி ஒரே ஷாட்டில் சூப்பர் ஹிட் படமாக்க திட்டமிட்டுள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இப்படி தசாவதார விவகாரம் ஒரு பக்கம் படு சூடாக போய்க் கொண்டிருக்கையில், இப்படத்தின் நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தின் நிழலிலிருந்து முற்றிலும் விலகி வந்து விட்டார்.

அவரது முழுக் கவனமும் தற்போது மர்மயோகியிலும், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கப் போகும் காந்தஹார் படத்திலும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X