லாரன்ஸும், 6 நாயகிகளும்

எம்ஜிஆர் நடித்த படங்களின் தலைப்புகளை தங்கள் படங்களுக்கு வைத்துப் பார்த்தார்கள் நம் ஹீரோக்கள். அடுத்து ரஜினி பட டைட்டிலுக்கு குறி வைத்திருக்கிறார்கள்.
பொல்லாதவன் எனும் தலைப்பை வைத்து ரஜினி மருமகன் தனுஷ் எடுத்த ஒரு படம் சுமாராக ஓடினாலும் ஓடினது, எல்லோரும் இப்போது ரஜினி நடித்த பட தலைப்புகளுடன்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்கே வருகிறார்களாம்.
இதில் தனுஷ் மட்டுமே 50க்கும் மேற்பட்ட ரஜினி படத் தலைப்புகளைப் பதிவு செய்து வைத்திருப்பதால், அவரிடம் இல்லாத வேறு தலைப்புகளை பதிவு செய்கிறார்களாம். அப்படி லாரன்ஸூக்காக இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பதிவு செய்துள்ள தலைப்பு ரஜினி நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற ராஜாதி ராஜா.
இந்தப் புதிய படத்தில் லாரன்சுக்கு ஜோடி 6 கதாநாயகிகளாம். கதாநாயகிகள் மட்டுமல்ல, வில்லன்களும் 6 பேர்.
அப்படியென்ன கதை?
செஸ்சில் ராஜாவுக்குதான் செக் வைப்பார்கள். ஆனால் படத்தின் நாயகனான இந்த ராஜாவுக்கு யாராலும் செக் வைக்கவே முடியாது. அப்படியொரு பவர்ஃபுல் ராஜாவாக லாரன்ஸ் நடிக்கிறார். அவரது கேரக்டருக்கு மேலும் பலம் சேர்க்கவே 6 நாயகிகள், 6 வில்லன்கள் என்றார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.
வழக்கமான ஷக்தி டைப் படமாக இருக்குமாம் இப்படம். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது.
நமீதா உண்டா சாரே?


Click it and Unblock the Notifications











