மணிரத்னம் படம்... மகேஷ் பாபு ஒப்பந்தம்!

விஜய், விக்ரம் மற்றும் விஷாலை இணைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளார் மணிரத்னம். கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிப்பதை விஜய்யும் விக்ரமும் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்போது மகேஷ் பாபுவை இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.
இதுகுறித்து மகேஷ்பாபு தனது ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்-
"மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இப்போது அந்தக் கனவு நிறைவேறப்போகிறது. வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக இதை உணர்கிறேன்", என்று கூறியுள்ளார் மகேஷ் பாபு.
இதற்கிடையே, மகேஷ் பாபுவுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கும் தொடர்பில்லை என்றும், இந்தப் படம் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படம் என்றும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்று மணிரத்னம் சொல்வாரா...?


Click it and Unblock the Notifications











