மகனுக்காக மறுபடியும் ஆண்பாவம்!

பாண்டியராஜனை இயக்குநராக தூக்கி நிறுத்திய படம் ஆண் பாவம். இப்படத்தில் அவரது இயக்கத்திற்கும், நடிப்புக்கும் சேர்த்தே மக்கள் பாஸ் மார்க் போட இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றிக் கொடி நாட்டினார் பாண்டியராஜன்.
இந்த நிலையில் இப்படத்தை தனது மகன் பிருத்வியை வைத்து ரீமேக் செய்யவுள்ளார் பாண்டியராஜன்.
பிருத்வி நடித்து இரண்டு படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் அவருக்கு இன்னும் நல்ல அறிமுகம் கிடைக்காமல் உள்ளது. இதனால்தான் தனது பாதிப்பை அதிகம் கொண்டுள்ள பிருத்விக்கு, ஆண்பாவம்தான் சரியான பிளாட்பார்ம் ஆக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆண் பாவத்தை கையில் எடுத்துள்ளார் பாண்டியராஜன்.
சீதா, ரேவதி, பாண்டியன் கேரக்டர்களுக்கான நடிகர், நடிகையரை தற்போது தேடிக் கொண்டிருக்கிறார்.
கூடவே, முக்கிய வேடத்தில் பாண்டியராஜனும் தலை காட்டவுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications