ரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டி ரசிகர்கள் பூஜை

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணம். இதை வலியுறுத்தி தமிழகத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் போராட்டம், நூதன வேண்டுதல்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்த வகையில் மதுரையில் நேற்று ரஜினி ரசிகர்கள் ஆட்டுக் கிடாய்களுடன் ஊர்வலம் நடத்தி, கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
முனிச்சாலை 6வது தெருவிலிருந்து ஆடுகளுடன் ஊர்வலமாக கிளம்பிய ரசிகர்கள் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்றனர். அங்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அன்னதானமும் நடத்தப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications