அமெரிக்கப் பயணம்: ரத்து செய்த சல்மான் 'கான்'!

By Staff

Salman Khan and Katrina Kaif
அமெரிக்க விமான நிலையத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானுக்கு நடத்தப்பட்ட சோதனையைப் பார்த்த பிறகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தையே ரத்து செய்துள்ளார் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கான்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் அமெரிக்கா போனார் ஷாரூக்கான். அவரது பெயர் கான் என்று முடிவதாவல், குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். 2 மணிநேரம் தனி அறையில் அமர வைக்கப்பட்டார் ஷாரூக். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு சிலர் அமெரிக்க அதிகாரிகளின் செயலை ஆதரிக்கவும் செய்தனர்.

இந்த நிலையில் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான்கான் தனது படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஷாரூக்கானுக்கு நேர்ந்ததைப் போல தனக்கும் நேரக்கூடும் என்பதால் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.

இவர் பெயரிலும் கான் என்ற வார்த்தை உள்ளது. கான் என முடிந்தால் அது முஸ்லிம்களின் பெயரைக் குறிக்கும், சோதனை என்ற பெயரில் மணிக்கணக்காக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும். எனவே சல்மான்கான் தனது பயணத்தை ரத்து செய்து விட்டதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X