சல்மானுக்கு வயது 43

பாலிவுட்டின் தகுதி வாய்ந்த 'பேச்சலர்களில்' ஒருவரான சல்மான் கான் நேற்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடினார்.
தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன், நவி மும்பையில் உள்ள பான்வேல் பகுதியி்ல் உள்ள தனது பண்ணை இல்லத்தில் கொண்டாடினார் சல்மான். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் சல்மான் கான், பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராகவும், மிக முக்கிய சர்ச்சை நாயகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
சமீபத்தில் கதாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சல்மான். அனில் சர்மா இயக்கும் வீர் படத்திற்கு அவர்தான் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
தற்போது ஆசினுடன் லண்டன் ட்ரீம்ஸ், சோஹைல் கானுடன் மெய்ன் ஆர் மிஸஸ் கண்ணா, போனி கபூரின் வான்ட்டட் - டெட்ட் ஆர் அலைவ் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சல்மான்.
ஆரம்பம் முதல் இன்று வரை ரசிகர்களிடையே ஒரே மாதிரியான பாப்புலாரிட்டியுடன் இருக்கும் ஒரே இந்தி நடிகர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது, ஆச்சரியகரமானது.
பாலிவுட்டின் பேட் பாய் என்ற செல்லப் பெயரும் சல்மானுக்கு உண்டு. ஆனால் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், நெருங்கிப் பழகாதவர்கள் வைத்த பெயர் இது என்று சமீபத்தில் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிரித்தபடி கூறினார் சல்மான்.


Click it and Unblock the Notifications











