தனியா நடிச்சா இனி கூட்டம் வராது!-சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தமிழ் படங்களில் நடிப்பதுடன், சமீபகாலமாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தமிழிலும் பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார். அதன் முதல் கட்டமாக, மதுமிதா இயக்கத்தில் உருவான 'கொல கொலயா முந்திரிக்கா' என்ற படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் சரத்குமார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியின்போது வந்திருந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
பொதுவா தமிழ்ல ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோ கூட சேர்ந்து நடிப்பதில்லை. ஆனால் மும்பையில் அப்படியில்லை. அங்கே ஓரிரு காட்சியில் நடிக்கக் கூட பெரிய நடிகர்கள் தயங்குவதில்லை.
இந்த நிலை இனி தமிழிலும் வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை இனி தனி ஹீரோவா நடிச்சு ரசிகர்களை தியேட்டருக்குள் கொண்டு வரமுடியாது. இரண்டு அல்லது மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிச்சாதான் மக்கள் அதிகமாக தியேட்டருக்குள் வருவார்கள்.தமிழிலும் அந்த நிலை வரும் என்று நம்புகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











